திமுக, அதிமுக அடுத்து தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது? கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்


திமுக, அதிமுக அடுத்து  தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது? கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்
x
தினத்தந்தி 3 May 2021 3:21 PM IST (Updated: 3 May 2021 3:21 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை தேர்தலில் எந்ததெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெற்றது என்று தேர்தல் ஆணையம் விவரங்களை வெளியிட்டுள்ளது.

சென்னை

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்  தி.மு.க அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தனித்து 125 இடங்களையும் உதய சூரியன் சின்னத்தில் 8 பேரில் வெற்றிப் பெற்ற நிலையில் 133 இடங்களை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமு, விசிக தலா 4 இடங்களையும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் - 4 இடங்களில் வெற்றி பெற்று உள்ளன

அதிமுக கூட்டணி - 75 இடங்களில் வெற்றி அதிமுக - 65 பாமக - 5 பாஜக - 4 இதர கட்சிகள் - 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எங்கும் வெற்றி பெறவில்லை.

தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு அடுத்த நாம் தமிழர் கட்சி பல இடங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. நாம் தமிழர்தான் பல இடங்களில் மூன்றாவது இடம் பிடித்தது என்பதால் வாக்கு சதவிகித ரீதியாக அந்த கட்சி 3வது பெரிய கட்சியாக வாய்ப்புள்ளது. நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில்  .6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

மக்கள் நீதி மய்யம்  கணிசமான வாக்குகளை கொங்கு மண்டலத்தில் பெற்றுள்ளது.  மக்கள் நீதி மய்யம் 2.4%, அமமுக 2.4% என்ற வாக்கு சதவிகிதத்தை பெற்று உள்ளது.

Next Story