பாதுகாப்பு அறைக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்ததையொட்டி பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்காக 5 ஆயிரத்து 516 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதையடுத்து வாக்குப்பிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவை அதற்கான பெட்டிகளில் வைக்கப்பட்டு லாரிகள் மூலம் திண்டுக்கல்லுக்கு நேற்று கொண்டுவரப்பட்டன.
துப்பாக்கி ஏந்திய நிலையில் துணை ராணுவத்தினர், மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் லாரிகளில் கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்தன.
பின்னர் அங்கு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பதற்காக கட்டப்பட்டுள்ள பிரத்யேக அறையில் வைக்கப்பட்டன.
முன்னதாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்திய வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story