டென்னிஸ் : 28 வயதில் ஓய்வு முடிவை அறிவித்தார் லாரா ராப்சன் - ரசிகர்கள் அதிர்ச்சி..!!


Image Courtesy : AFP
x
Image Courtesy : AFP
தினத்தந்தி 16 May 2022 2:20 PM GMT (Updated: 16 May 2022 2:20 PM GMT)

லாரா 14 வயதில் ஜூனியர் விம்பிள்டன் பட்டத்தை வென்றதன் மூலம் உலக டென்னிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

லண்டன்,

டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக லாரா ராப்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனையான இவர் தனது 14 வயதில் ஜூனியர் விம்பிள்டன் பட்டத்தை 2008 ஆம் ஆண்டு வென்றதன் மூலம் உலக டென்னிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஆஸ்திரேலியாவில் பிறந்து இருந்தாலும் இவர் இங்கிலாந்து நாட்டிற்காக டென்னிஸ் விளையாண்டு வருகிறார். இவர் 2012 ஆம் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்டி முர்ரேவுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றவர் லாரா ராப்சன்.

அதை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு முதல் இவர் அவ்வப்போது காயத்தால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்று இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் லாரா ராப்சன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

லாரா ராப்சனின் ஓய்வு முடிவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story