மாநில செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர் + "||" + SSLC 94.4% pass in the examination

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரத்து 800 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 9 லட்சத்து 82 ஆயிரத்து 97 பேர் ஆவார்கள்.

விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவு நேற்று காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் வெளியிடப்பட்டது.

பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிடும் முறையில் மாற்றம் கொண்டு வந்தது போல நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின் முடிவை வெளியிடுவதிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

ரேங்க் ரத்து

மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில அளவில் முதல் இடம், இரண்டாவது இடம், 3-வது இடம் பெற்றவர்கள் விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மாணவ-மாணவிகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

94.4 சதவீதம் தேர்ச்சி

இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.4 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி 0.8 சதவீதம் அதிகரித்து உள்ளது. வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 3.7 சதவீதம் அதிகம் ஆகும்.

அதிக மதிப்பெண்

500-க்கு 481-க்கு அதிகமாக மதிப்பெண் எடுத்து 38,613 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 26,988 பேர் மாணவிகள். 11,625 பேர் மாணவர்கள். 12,188 பள்ளிகளில் 5,059 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று இருக்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 5,463 அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1,557 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

மாணவ-மாணவிகள் பள்ளிகளில் கொடுத்த செல்போன் எண்களில் அவர்களுடைய தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் விவரம் ஆகியவை எஸ்.எம்.எஸ். மூலம் அரசு தேர்வுத்துறை சார்பில் உடனடியாக அனுப்பப்பட்டன. இதனால் அவர்களு எளிதில் தேர்வு முடிவுகளை அறிய முடிந்தது.