தேசிய செய்திகள்

நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர்: உத்தரகாண்ட் முதல்வர் + "||" + No one was stranded,there were no unfortunate incidents,1800 tourists (against reported 15K) were affected: U'khand CM Trivendra Singh Rawat

நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர்: உத்தரகாண்ட் முதல்வர்

நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர்: உத்தரகாண்ட் முதல்வர்
நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர் என்று உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
டேராடூன்,

உத்தராகண்டில் ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட பல்வேறு புனித தலங்கள் உள்ளன. அங்கு சமோலி மாவட்டம் ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டு பத்ரிநாத் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் ஆங்காங்கே பரிதவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த நிலையில், 15 ஆயிரம் பக்தர்கள் சிக்கி தவிக்கவில்லை எனவும், 1800 சுற்றுலா பயணிகள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகவும் உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார். மேலும் நிலச்சரிவில் சிக்கிய அனைவருமே மீட்கப்பட்டு விட்டதாகவும், துரதிருஷ்டவசமான எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. நெடுஞ்சாலையில் உள்ள மணல் குவியல்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் பாதை திறக்கப்படும். தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.