ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு கடிதம் மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் | ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஐயப்பன் மீண்டும் மார்ச் 8ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு | லோக்பால் அமைப்புக்கு தலைவரை நியமிப்பது தொடர்பாக மார்ச்.1ஆம் தேதி ஆலோசனை - மத்திய அரசு | முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் இணைந்துவிடுவார்கள் - தினகரன் | திருவண்ணாமலையில் 3 ஸ்கேன் மையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு | முதல்வர் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை - எச்.ராஜா |

உலக செய்திகள்

அஜ்மல் கசாப்பை விட மிகப்பெரிய பயங்கரவாதி குல்பூஷன் ஜாதவ்: முஷரப் சொல்கிறார் + "||" + Pervez Musharraf says Kulbhushan Jadhav is 'a bigger terrorist than Ajmal Kasab'

அஜ்மல் கசாப்பை விட மிகப்பெரிய பயங்கரவாதி குல்பூஷன் ஜாதவ்: முஷரப் சொல்கிறார்

அஜ்மல் கசாப்பை விட மிகப்பெரிய பயங்கரவாதி குல்பூஷன் ஜாதவ்: முஷரப் சொல்கிறார்
அஜ்மல் கசாப்பை விட மிகப்பெரிய பயங்கரவாதி குல்பூஷன் ஜாதவ் என்று பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான முஷரப் தெரிவித்துள்ளார்.
இஸ்லமாபாத்,

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளாரான பர்வேஷ் முஷரப், ”அஜ்மல் கசாப்பைவிட மோசமான பயங்கரவாதி குல்பூஷன் ஜாதவ்” என்று தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த முஷரப் கூறியதாவது:- “  164 பேர் கொல்லப்பட்ட மும்பை தாக்குதலுக்கு காரணமான 10 பாகிஸ்தானியர்களில் ஒருவர்தான் அஜ்மல் கசாப். அஜ்மல் கசாப் ஒரு சிப்பாய் ஆகத்தான் செயல்பட்டார். ஆனால், ஜாதவ் ஒரு உளவாளியாக செயல்பட்டுள்ளார். ஜாதவ் பயங்கரவாதத்தை ஊக்குவித்து நாசவேலைகளால் பல மக்களை கொன்று இருக்க கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி அந்நாடு அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால், குல்பூஷன் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து,  சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டது. இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவை தூக்கில் போட தடை விதித்து  உத்தரவிட்டது. 

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்த போதும், பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  “தேச பாதுகாப்பை பொறுத்தவரையில், சர்வதேச கோர்ட்டின் அதிகார வரம்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதை சர்வதேச கோர்ட்டில் தெரிவித்து உள்ளோம். ஜாதவ் விவகாரத்தை சர்வதேச கோர்ட்டுக்கு எடுத்துச்சென்று இந்தியா தனது உண்மை முகத்தை மறைக்க முயற்சித்துள்ளது என்று  பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்தது.