உலக செய்திகள்

பிரான்சில் காளைகளை அடக்கும் நிகழ்ச்சியில் பிரபல வீரர் பலி + "||" + Beloved matador Ivan Fandino, 36, gored to death by bull in France

பிரான்சில் காளைகளை அடக்கும் நிகழ்ச்சியில் பிரபல வீரர் பலி

பிரான்சில் காளைகளை அடக்கும் நிகழ்ச்சியில் பிரபல வீரர் பலி
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற காளைகளை அடக்கும் விழாவில் பிரபல வீரர் ஒருவர் துரதிஷ்டவசமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு பிரான்ஸில் உள்ள எய்ர் சுர் அடவர் என்ற இடத்தில் நேற்று முன் தினம் காளையை அடக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமாக இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.  காளையை அடக்க ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல வீரரான இவன் பெட்டினோ (36)  களத்தில் இறங்கினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் பல விருதுகளையும் பெற்று பிரபலமானவர். இந்நிலையில், நிகழ்ச்சி துவங்கியதும் காளையிடம் சண்டையிட அவர்  தயாராகியுள்ளார்.

அப்போது, துரதிஷ்டவசமாக அவர்  அணிந்திருந்த உடை அவரது கால்களை சுற்றியுள்ளது. இதில் நிலை தடுமாறிய அவரை காளை தனது கூர்மையான கொம்புகளால் குத்தியுள்ளது.

ஆழமான காயம் ஏற்பட்ட நிலையில் அவர் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனில்லாத காரணத்தினால் பரிதாபமாக பலியானார்.

மருத்துவர்கள் வெளியிட்ட தகவலில் காளையின் கொம்பு அவரது நுரையீரலை சேதப்படுத்தி விட்டதாகவும், ஆம்புலன்ஸில் கொண்டு வரும்போது அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.