உலக செய்திகள்

லண்டன் அடுக்குமாடி தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு + "||" + Presumed death toll in London tower blaze rises to 79

லண்டன் அடுக்குமாடி தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு

லண்டன் அடுக்குமாடி தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு
லண்டன் தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளதாக இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
லண்டனில் உள்ள கிரன்பெல் டவர் அடுக்குமாடி  குடியிருப்பில் கடந்த புதன்கிழமை அன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்து விட்டதாக முதற்கட்டமாக தெரியவந்தது. பின்னர், நேற்று வெளியான தகவலில் பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரித்தது.

ஆனால், தீ விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் சோதனை செய்து வரும் போலீசார் இன்று வெளியிட்டுள்ள தகவலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இவர்களில் 5 பேரிடன் அடையாளம் தெரிந்துள்ளதாகவும், ஆனால், இது குறித்து தகவலை வெளியிட முடியாது என போலீசார் மறுத்துள்ளனர்.

போலீஸ் அதிகாரியான ஒருவர் கூறும் போது  ‘கட்டிடம் மிகவும் சேதம் அடைந்துள்ளது. இச்சூழலில் விரைவாக தேடுதல் பணியை முடக்கி விடுவது ஆபத்தை ஏற்படுத்தும்.

கட்டிடத்திற்குள் உயிரிழந்தவர்களின் சிலரை அடையாளம் காண்பது சிரமாக உள்ளது. எனவே, தேடுதல் பணி சில வாரங்கள் வரை தொடரும்’ என தெரிவித்துள்ளார்.

தீ விபத்து நிகழ்ந்து இரண்டு தினங்களுக்கு பின்னர் கட்டிடத்திற்குள் பலியாணவர்களின் எண்ணிக்கை 100 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என போலீசார் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.