மாநில செய்திகள்

தமிழக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம் + "||" + In the Tamil Nadu assembly By voice vote The GST Bill is implemented

தமிழக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்

தமிழக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஜிஎஸ்டி மசோதா  நிறைவேற்றம்
தமிழக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஜிஎஸ்டி மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
சென்னை

சரக்கு மற்றும் சேவை வரி மீதான விவாதம் சட்டசபையில் நடைபெற்றது. அப்போது ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய அரசு, வணிகர்களிடம் ஆலோசனை நடத்தவில்லை என திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் மு.கஸ்டாலின் பேசும் போது ஜிஎஸ்டி தொடர்பாக வணிகர்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும். மசோதாவை தற்போது நிறைவேற்றாமல் சட்டமன்றத்தின் தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஜிஎஸ்டி மசோதாவை தற்போது நிறைவேற்றக்கூடாது என ஸ்டாலின் வலியுறுத்தினார்.

 மாபா பாண்டியராஜன் பேசும் போது திமுக எம்.எல்.ஏக்கள் புரிதல் இல்லாமல் பேசி வருகிறார்கள்.  ரூ4400 கோடி வணிகவரி  அதிகரிக்கும் என கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது
ஜிஎஸ்டி வரிவிதிப்பால் வணிகர்கள் அச்சப்படத் தேவையில்லை. ஜிஎஸ்டி வரியால் வணிகர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிவர்த்தி செய்யப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

பின்னர் ஜிஎஸ்டி மசோத சட்டசபையில் குரல் வாக்கேடுபு மூலம் நிறைவேற்றபட்டது. ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.