தேசிய செய்திகள்

இந்திய விமானப் படையில் வீரர்கள் தட்டுப்பாடு விமானப்படை தளபதி குற்றசாட்டு + "||" + IAF Chief Again Points Out Shortage Of Fighter Sqaudrons, Says It's Like Playing Cricket With 7 Players

இந்திய விமானப் படையில் வீரர்கள் தட்டுப்பாடு விமானப்படை தளபதி குற்றசாட்டு

இந்திய விமானப் படையில் வீரர்கள் தட்டுப்பாடு விமானப்படை தளபதி குற்றசாட்டு
கிரிக்கெட்டில் 11 வீரர்களுக்கு பதில் 7 வீரர்கள் விளையாடுவது போல் இந்திய விமானப் படையில் வீரர்கள் தட்டுப்பாடு உள்ளது என விமானப்படையின் தலைமை மார்ஷல் பி.எஸ். தனோ கூறி உள்ளார்.
புதுடெல்லி

இந்திய விமானப் படையில் வீரர்கள் குறைபாட்டால் பல பிரச்சனைகளை சந்திப்பதாக  விமானப்படையின் தலைமை மார்ஷல் பி.எஸ். தனோ  செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் ,” இந்தச் சூழ்நிலை கிரிக்கெட் அணியில் 11 வீரர்களுக்கு பதிலாக ஏழு வீரர்கள் விளையாடுவது போல் உள்ளது”என தெரிவித்துள்ளார்.

இரண்டு எல்லை நாடுகளுக்கு குறைந்தபட்சம் 42 வீரர்களாவது பாதுகாப்புக்கு இருக்கவேண்டும். ஆனால் பாகிஸ்தான் மற்றும் சைனா வின் பாதுகாப்பில் 32 வீரர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் தாங்கள் சவாலான சூழ்நிலையில் செயல்படுவதாக தனோ தெரிவித்தார்.

காஷ்மீர் பாகிஸ்தான் பிரச்சினையில் விமான படையை பயன்படுத்தும் வாய்ப்பு அரசுக்கு இருந்தும் ஏன் பயன்படுத்தவில்லை என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பி.எஸ்.தனோ,” தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக விமானப்படையைப் பயன் படுத்துவது அரசின் விருப்பம். எங்கள் படை எப்போதும் தயாராக உள்ளது”என தெரிவித்துள்ளார்.  

மேலும் அவர் இந்திய ராணுவம்,கடற்படை மற்றும் விமானப்படை ஒருங்கிணைந்த  தியேட்டர் கமண்ட்டிற்கான ஒப்புதலுக்கு அவர் தனது ஆட்சபனையை தெரிவித்துள்ளார்.ஏனென்றால்  விமானப்படை பழைய உத்திகளை பயன்படுத்தும் போது இந்த முறை சாத்தியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.