தேசிய செய்திகள்

டாடா நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க நிறுவனம் எஃப்-16 போர் விமானங்களை தயாரிக்கிறது + "||" + Lockheed signs pact with Tata to make F-16 planes in India

டாடா நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க நிறுவனம் எஃப்-16 போர் விமானங்களை தயாரிக்கிறது

டாடா நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க நிறுவனம் எஃப்-16 போர் விமானங்களை தயாரிக்கிறது
அமெரிக்காவின் பிரபல ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடாக்களுடன் இணைந்து போர் விமானங்களை தயாரிக்கிறது.
பாரிஸ்

இந்திய விமானப்படைக்கு ஏராளமான விமானங்கள் தேவைப்படுகின்றன. தற்போதுள்ள பழைய சோவியத் கால போர் விமானங்களுக்கு பதிலாக புதிய நவீன போர் விமானங்களை படையில் சேர்க்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். ஆனாலும் அவற்றை இறக்குமதி செய்யாமல் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். இதன் மூலம் உள்நாட்டு தொழில் உற்பத்தி பெருகும், அத்துடன் அந்நிய செலாவணியும் குறையும்.

மே இன் இந்தியா திட்டத்தின் கீழ் இத்தொழில் கூட்டணி துவங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இரண்டு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில் இக்கூட்டணி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அமெரிக்காவிற்கே முன்னுரிமை எனும் கொள்கையை பலவீனப்படுத்தாமல் உற்பத்தியை இந்தியா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளிலும் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர். இது குறித்து டிரம்ப் நிர்வாகத்திற்கு தெரிவித்து விட்டோம் என்று லாக்ஹீட் மார்ட்டின் தெரிவித்துள்ளது. 

இச்சூழ்நிலையில் மோடி அமெரிக்காவிற்கு செல்லவுள்ளார். அதிபர் டிரம்பை அவர் முதல் முறையாக சந்தித்து பேசவுள்ளார். 

இந்தியாவின் முக்கிய ஆயுத விற்பனையாளர் பட்டியலில் அமெரிக்கா முக்கிய இடம் பிடித்து வருகிறது. ரஷ்யா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இதர முக்கிய ஆயுத ஏற்றுமதி நாடுகளாகும். தற்போதைய ஒப்பந்தப்படி 100 லிருந்து 250 விமானங்களை படையில் சேர்க்கப்படும் வாய்ப்புள்ளது.