மாநில செய்திகள்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நோன்பு திறப்பு: முஸ்லிம் மக்களுக்கு தி.மு.க. எப்போதும் துணை நிற்கும் + "||" + Fasting on behalf of Indian Union Muslim League: DMK always stand in support to Muslims

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நோன்பு திறப்பு: முஸ்லிம் மக்களுக்கு தி.மு.க. எப்போதும் துணை நிற்கும்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நோன்பு திறப்பு:  முஸ்லிம் மக்களுக்கு தி.மு.க. எப்போதும் துணை நிற்கும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், ‘‘முஸ்லிம் மக்களுக்கு தி.மு.க. எப்போதும் துணைநிற்கும்’’, என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
சென்னை,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, உணவு பொருட்கள் வழங்கும் விழா சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எம்.ஜெயினுல்ஆபிதீன் தலைமை தாங்கினார்.

தி.மு.க. மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்பட அரசியல் தலைவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். எம்.எல்.ஏக்கள் அபுபக்கர், மாதவரம் சுதர்சனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:–

மதசார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் தற்போது சோதனை வந்துள்ளது. தமிழகத்துக்கும் மின்வெட்டு மூலமாக சோதனை வருகிறது. இதனை நாம் ஒற்றுமையாக இருந்து மாற்றுவோம். மத நல்லிணக்கத்துக்கு சான்றாக இருக்கவேண்டிய நாடு, இந்தியா. ஆனால் மக்களை எப்படி பிரித்து ஆளுவது? வேற்றுமைகளை எப்படி கொண்டுவருவது? என்பதையே மத்திய அரசு யோசிக்கிறது.

அதனை தடுக்க முடியாத ஒரு அரசாக தமிழக அரசு இருக்கிறது. மொழியின் மூலமாகவும், மத்திய அரசு ஆதிக்கத்தை திணிக்க முயற்சிக்கிறது. அரசியலுக்காக உணவு பழக்க வழக்கங்களையும் மக்கள் மீது திணிக்கிறது. விருப்பப்பட்ட உணவை சாப்பிடுவது மனிதர்களின் சுதந்திரம். எனவே மத்திய அரசின் கொள்கைகளுக்கு தி.மு.க. ஒருபோதும் துணைபோகாது.

முஸ்லிம்களின் உரிமைகளுக்காக பாடுபடக்கூடியவர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை தந்தவர் கருணாநிதி. முஸ்லிம் மக்களுக்கு எப்போதும் தி.மு.க. துணைநிற்கும்.  இவ்வாறு அவர் பேசினார்.