உலக செய்திகள்

லண்டனை அடுத்து பாரிஸ்சிலும் காரை மோதி தாக்குதல் + "||" + Car rams police van on Paris Champs Elysees driver dead

லண்டனை அடுத்து பாரிஸ்சிலும் காரை மோதி தாக்குதல்

லண்டனை அடுத்து பாரிஸ்சிலும் காரை மோதி தாக்குதல்
ஆயுதம் தாங்கிய கார் ஒன்றை காவல்துறை வாகனம் மீது மோதிய சம்பவம் பாரிஸ்சில் தீவிரவாத தாக்குதல் அச்சத்தை அதிகரித்துள்ளது.
பாரிஸ்

பாதுகாப்பு நிறைந்த சாம்ப்ஸ் எல்சி அரண்மனைப் பகுதியில் காவல்துறை வாகனம் மீது ஆயுதம் தாங்கிய கார் ஒன்றை மோதவிட்ட நபர் மரணமடைந்தார். காரிலிருந்து எழுந்த புகையை தீயணைப்பு வாகனங்கள் அணைத்தன. கார் கண்ணாடியை உடைத்து காரிலிருந்து ஒரு மனிதரை காவல்துறையினர் வெளியே இழுத்ததாக பார்வையாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கொல்லாம் பேசும்போது, “இச்சம்பவம் மூலம் பிரான்சில் தீவிரவாதத் தாக்குதல் அபாயம் அதிகரித்திருப்பது தெரியவருகிறது” என்றார். 

லண்டன் நகரில் முஸ்லிம் மக்கள் மீது காரை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை ஒட்டி நடந்துள்ளது. இம்மாதத்தில் நடந்த மூன்று தாக்குதல்களில் 30 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். முதல் முறையாக நேற்றைய தாக்குதலின் போது தாக்குதல் நடத்தியவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.  

சென்றாண்டு பிரான்ஸ் நாட்டில் நைஸ் என்ற இடத்திலும், 2015 ஆம் ஆண்டிலும் நிகழ்த்தப்பட்ட பல தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர்.