பிரான்ஸ்சில் நெருக்கடி நிலையை நீக்க அதிபர் மெக்ரான் முடிவு

அதிபர் மெக்ரான் பிரான்ஸ்சில் நெருக்கடி நிலையை நீக்குவதற்கு முடிவெடுத்துள்ளதாக கூறினார்.
வெர்செய்ல்ஸ்
அந்நாட்டில் நெருக்கடி நிலை கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது. நெருக்கடி நிலை நீக்கப்பட்டாலும், நிரந்தரமாக இஸ்லாமிய தீவிரவாதம் உட்பட பல ஆபத்துகளை எதிர்த்துப் போராட்ட வலுப்படுத்தப்போவதாகவும் மெக்ரான் தெரிவித்தார்.
வெர்செய்ல்ஸ் அரண்மனையி நடந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தனது அரசியல், பாதுகாப்பு மற்றும் தூதரக கொள்கை முன்னுரிமைகள் குறித்து பேசிய அவர் , “புதிய தாக்குதல்களை தடுக்க செயல்படுவோம், தீவிரவாதிகளுடன் போராட இரக்கம், வருத்தம் மற்றும் பலவீனமின்றி போராடுவோம் என்றார்.
அதே சமயம், தனிநபர்களின் சுதந்திரத்திற்கு முழு மரியாதை கொடுக்க வேண்டியதையும் அவர் வலியுறுத்தினார். புதிய வழிமுறைகள் காவல்துறைக்கு பல அதிகாரங்களை வழங்குவது குறித்து கவலைகள் ஏற்பட்டுள்ளன.
தீவிரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் எடுத்துவரும் இராணுவ தலையீடுகளை தொடர்ந்து நிலைநிறுத்த சபதம் செய்தார் மெக்ரான்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது பலருக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு பதிலுரைக்கும் விதமாக மெக்ரான், “எனக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நம்பிக்கையுள்ளது. ஆனால் இந்த எதிர்மறையான எண்ணங்கள் நியாயமற்றவை எனவும் கருதவில்லை” எனவும் அவர் தெரிவித்தார். ஆனால் இடதுசாரிகள் உட்பட பல எதிர்க்கட்சிகள் மெக்ரான் மக்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக அவசரச் சட்டங்கள் வழியாக ஆட்சி செய்ய முயல்வதாக குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக தொழிலாளர் உரிமைகளை அவர் பறிக்க விரும்புவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
மெக்ரான் ஐரோப்பிய நாடுகள் அரசியல் தஞ்சம் கோருவோருக்கு ஆதரவாக செயல்படும் அதே நேரத்தில் அகதிகளின் அனுமதியற்ற குடியேற்றம் போன்றவற்றிற்கு எதிராக இணைந்து செயலாற்ற வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story






