உலக செய்திகள்

இந்திய வீரர்கள் இடம் பெற்ற புகைப்படத்தை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார் நேதன்யாகு + "||" + Netanyahu gifts Indian soldiers' photo to Modi

இந்திய வீரர்கள் இடம் பெற்ற புகைப்படத்தை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார் நேதன்யாகு

இந்திய வீரர்கள் இடம் பெற்ற  புகைப்படத்தை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார் நேதன்யாகு
இந்திய வீரர்கள் இடம் பெற்றிருந்த புகைப்படத்தை பிரதமர் மோடிக்கு நேதன்யாகு பரிசாக வழங்கினார்.
ஜெருசலேம்,

இந்தியா-இஸ்ரேல் இடையிலான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டதன் 25-ம் ஆண்டு நினைவாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். தனி விமானம் மூலம் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் சென்று இறங்கிய மோடியை, அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ விமான நிலையத்துக்கே வந்து சிறப்பாக வரவேற்றார். இஸ்ரேலில்  3 நாள் தங்கியிருக்கும் பிரதமர் மோடி அங்கே பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நினைவு பரிசுகளை அளித்தார்.. 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் யூதர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று நினைவு தாமிர தகடுகளை மோடி வழங்கினார். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு,  பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு பிரிவாக இருந்த இந்திய ராணுவ வீரர்கள் இருக்கும் புகைப்படத்தை  பரிசாக அளித்தார்.

பெஞ்சமின் நேதன்யாகு தனது இல்லத்தில் பிரதமர் மோடிக்கு அளித்த தனிப்பட்ட விருந்தின் போது இந்த புகைப்படத்தை பரிசாக அளித்தார். பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்திலும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்திகள்

1. ‘‘காவலாளி ஒரு திருடன்’’ பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி தாக்கு
ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
2. பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம்
இந்தியா–பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார்.
3. தேசிய நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின்வாங்காது - பிரதமர் மோடி
மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4. பிரதமர் மோடியை சந்திக்க முடியாத வருத்தத்தில் பேருந்து மீது தீ வைத்த பெண் கைது
உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடியை சந்திக்க முடியாத வருத்தத்தில் பெண் ஒருவர் பயணிகள் பேருந்து மீது தீ வைத்துள்ளார்.
5. பிரதமர் மோடியுடன் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி சந்திப்பு
இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.