பாகிஸ்தானுக்காக காஷ்மீரில் மூன்றாவது நாட்டு ராணுவம் சீனாவில் இருந்து புதிய மிரட்டல்


பாகிஸ்தானுக்காக காஷ்மீரில் மூன்றாவது நாட்டு ராணுவம் சீனாவில் இருந்து புதிய மிரட்டல்
x

பாகிஸ்தானுக்காக காஷ்மீரில் மூன்றாவது நாட்டு ராணுவம் களமிறங்கும் என சீனாவில் இருந்து இந்தியாவிற்கு புதிய மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.


பெய்ஜிங்,

இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடான் நாட்டின் டோகாலம், சீனாவின் டோங்லாங் ஆகிய பகுதிகள் ஒரு முனையில் சந்திக்கின்றன. அங்கு ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சீன ராணுவத்தை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி உள்ளது. பூடானும் சீனாவிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பின் முக்கிய பங்காற்றும் பகுதியை ஆக்கிரமிக்க துடிக்கும் சீன ராணுவத்தை அரண் அமைத்து இந்தியா தடுத்து உள்ளது. அங்கிருந்து ராணுவத்தை திரும்ப பெற மாட்டோம் என இந்தியா அறிவித்துவிட்டது.

 இதனால் ஆத்திரம் அடைந்து உள்ள சீனா தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. சீன மீடியாவும் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் விதமாக தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது.

இவ்வரிசையில் இப்போது சீனாவின் அரசு மீடியாவான குளோபல் டைம்ஸ் பாகிஸ்தானுக்காக காஷ்மீரில் மூன்றாவது நாட்டு ராணுவம் களமிறங்கும் என குறிப்பிட்டு உள்ளது. சிக்கிம் செக்டாரில் பூடானுக்கு ஆதரவாக சீனாவின் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தும் இந்தியாவின் ‘லாஜிக்’ காஷ்மீருக்கும் பொருந்தும் என சீனாவின் திங் டாங் கூறிஉள்ளார். சீன அரசு மீடியாவான குளோபல் டைம்ஸில், சீன மேற்கு நார்மல் பல்கலைக்கழகத்தின் இந்தியாவிற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் இயக்குநர் லோங் ஜிங்சுன், பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று காஷ்மீருக்குள் மூன்றாவது நாடு தலையிட முடியும் என கூறிஉள்ளார். 

 “பூடான் பகுதியை பாதுகாக்க இந்தியாவிற்கு பூடான் கோரிக்கை விடுத்து இருந்தால், இந்திய ராணுவம் பூடான் எல்லைக்குள்தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும், பிரச்சனைக்குரிய பகுதியில் கிடையாது,” என லோங் ஜிங்சுன் கூறிஉள்ளார். இந்தியாவின் லாஜிக்படி பார்த்தால், பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்தால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பிரச்சனையில் உள்ள பகுதிக்குள் மூன்றாவது நாட்டின் ராணுவம் இறங்கமுடியும், இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் உள்பட என குளோபல் டைம்ஸ் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 More update

Next Story