பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து வந்த வேற்று கிரகவாசி சமிக்ஞை


பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து வந்த வேற்று கிரகவாசி சமிக்ஞை
x
தினத்தந்தி 17 July 2017 12:18 PM GMT (Updated: 17 July 2017 12:18 PM GMT)

பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து வந்த வேற்று கிரகவாசி சமிக்ஞையை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து ள்ளனர்.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி  வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம். என கூறி உள்ளார்.

வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் முன்னணி நிபுணர்கள் இது வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொள்ள ஏற்ற நேரம் என தெரிவித்து உள்ளனர்.அதற்கான செயல்பாடுகளிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வெல்ஸ்,சீனா மற்றும் பல்வேறு இடங்களில் நவீன ரேடியோ தொழில் நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். பிரபஞ்சத்தில் இருந்து வரும் வினோதமான சமிக்ஞைகளை தொகுத்து ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்தில் 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் தெரிந்து வந்த ஒரு சமிக்ஞையை ஆய்வு செய்து வருகின்றனர்.

ராஸ் 128 என்று அழைக்கப்படும் சிவப்பு குள்ள நட்சத்திரத்தில் இருந்து  இந்த சமிக்ஞை கிடைத்து உள்ளது . இது சூரியனை விட  2,800 மடங்கு  மங்கலானது ஆகும். அதை சுற்றி வேறு  எந்த  கிரகம் உள்ளது என  தெரியவில்லை.

Next Story