ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு கடிதம் மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் | ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஐயப்பன் மீண்டும் மார்ச் 8ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு | லோக்பால் அமைப்புக்கு தலைவரை நியமிப்பது தொடர்பாக மார்ச்.1ஆம் தேதி ஆலோசனை - மத்திய அரசு | முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் இணைந்துவிடுவார்கள் - தினகரன் | திருவண்ணாமலையில் 3 ஸ்கேன் மையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு | முதல்வர் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை - எச்.ராஜா |

தேசிய செய்திகள்

அமர்நாத் தாக்குதல்; பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பு எங்கு இருக்கிறது? மெகபூபா முப்தி பதில் + "||" + Mehbooba Mufti It s an opportune time to restart talks with Kashmiri separatists

அமர்நாத் தாக்குதல்; பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பு எங்கு இருக்கிறது? மெகபூபா முப்தி பதில்

அமர்நாத் தாக்குதல்; பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பு எங்கு இருக்கிறது? மெகபூபா முப்தி பதில்
மத பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதே பயங்கரவாதிகளின் நோக்கமாகும் என காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி பேசிஉள்ளார்.
புதுடெல்லி,


 காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனி லிங்கத்தை தரிசித்துவிட்டு பக்தர்கள் திரும்பிய பஸ் மீது கடந்த 10–ந்தேதி இரவு பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 8 பக்தர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பல்வேறு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என ஏற்கனவே மத்திய உளவுத்துறைகள் எச்சரிக்கை விடுத்து இருந்தன, பாதுகாப்பையும் மீறி தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கள் கடும் விமர்சனத்தை எதிர்க்கொண்டு உள்ளது.

இந்நிலையில் ஆங்கிலப்பத்திரிக்கைக்கு பேட்டியளித்த பேசிய காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தியிடம், அமர்நாத் யாத்திரையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல்களும், உளவுத்துறை தகவல்களும் உள்ளது. இவ்விவகாரத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான பொறுப்பு எங்கு உள்ளது? என கேள்வி எழுப்பட்டது. மெகபூபா முப்தி பதிலளித்து பேசுகையில், நான் இதனை பாதுகாப்பு குறைபாடாக நினைக்கவில்லை மற்றும் துரதிஷ்டவசமாக யாத்திரையின் மீது தாக்குதல் நடத்துவது இது முதல்முறை கிடையாது.

பயங்கரவாதிகள் யாத்ரீகர்களை மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக பார்க்கின்றனர், அவர்களுடைய நோக்கமானது மத பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதே. ஜம்மு மற்றும் காஷ்மீரை பிரிப்பது, நாட்டையும் பிரிப்பது. 

இவ்விவகாரத்தில் உணவுர்கள், மாறுபட்ட கொள்கைகள் இருந்த போதிலும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர், இதனை ஒரு வாய்ப்பாக பார்க்கப்பட வேண்டும். பிரிவினைவாதிகள் அல்லது பொதுமக்கள், இளைஞர்கள், வியாபாரிகள், சமூதயமாக இருக்கட்டும் அமர்நாத் யாத்திரை தாக்குதலால் மிக்க வேதனையை அடைந்து உள்ளனர், காஷ்மீரிகள், அவர்களுடைய 'காஷ்மீரியத்' (காஷ்மீர் கலாசாரம்) எதனையும்விட மிகப்பெரியது என காட்டிஉள்ளனர். மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முதிர்ந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார். 

காஷ்மீர் மக்களை பாராட்டிஉள்ளார். இது அடுத்தக்கட்ட நிலைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். துரதிஷ்டவசமாக பேச்சுவார்த்தை அல்லது அடுத்தக்கட்ட நகர்வு என்பது திருப்திபடுத்தல் என்பதுடன் குழப்பத்தில் உள்ளது. ஒருதரப்பு பேச்சுவார்த்தை என கூறுகையில், மின்னணு ஊடகங்கள் மற்றும் பிறர் நீங்கள் பிரிவினைவாதிகளை திருப்திபடுத்துகிறீர்கள், பிறரை சமாதானம் செய்கிறீர்கள் என்கிறார்கள். பேச்சுவார்த்தை என்பது நல்லிணக்கத்திற்கான நகர்வாகும் என குறிப்பிட்டு உள்ளார். தி இந்து ஆங்கிலப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் காஷ்மீரி பிரிவினைவாதிகள் உடனான பேச்சுவார்த்தையை தொடங்க சரியான தருணம் என குறிப்பிட்டு உள்ளார் மெகபூபா முப்தி.