ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு கடிதம் மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் | ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஐயப்பன் மீண்டும் மார்ச் 8ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு | லோக்பால் அமைப்புக்கு தலைவரை நியமிப்பது தொடர்பாக மார்ச்.1ஆம் தேதி ஆலோசனை - மத்திய அரசு | முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் இணைந்துவிடுவார்கள் - தினகரன் | திருவண்ணாமலையில் 3 ஸ்கேன் மையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு | முதல்வர் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை - எச்.ராஜா |

தேசிய செய்திகள்

பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிப்பு + "||" + Minister Venkaiah Naidu Is BJP's Candidate For Vice President

பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிப்பு

பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிப்பு
பாரதீய ஜனதா கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 5–ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர் கட்சிகள் சார்பில் கோபால் கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய அக்கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு, பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக பதவி வகிக்கும் வெங்கையா நாயுடு, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 1949 ஆம் ஆண்டு பிறந்தார்.

 விசாகப்பட்டினத்தில் சட்டப்படிப்பு  படித்துள்ளார்.இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ், அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்புகளில் தீவிரமாக பணியாற்றியுள்ளார். 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பாஜகவின் தேசிய தலைவராகவும் வெங்கையா நாயுடு இருந்துள்ளார். வெங்கையா நாயுடு 2016-ல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.