தேசிய செய்திகள்

அமர்நாத் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை + "||" + 3 terrorists involved in the Amarnath terror attack were shot dead

அமர்நாத் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை

அமர்நாத் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை
அமர்நாத் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் தீவிரவாத அமைப்பினை சேர்ந்த 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.
அனந்த்நாக்,

ஜம்முமற்றும்காஷ்மீரின்அனந்த்நாக்பகுதியில்பேருந்துஒன்றில்அமர்நாத்பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர்.  இந்நிலையில், அந்த பேருந்தின் மீது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த தாக்குதலில் 8 பக்தர்கள் பலியாகினர்.  12 பேர் வரை காயம் அடைந்தனர்.  இதனை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.  தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அமர்நாத் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் தீவிரவாத அமைப்பினை சேர்ந்த 3 தீவிரவாதிகளை அனந்த்நாக் பகுதியில் வைத்து பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.

அவர்கள் சாத், ஜிப்ரால் மற்றும் நசீர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.