ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு கடிதம் மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் | ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஐயப்பன் மீண்டும் மார்ச் 8ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு | லோக்பால் அமைப்புக்கு தலைவரை நியமிப்பது தொடர்பாக மார்ச்.1ஆம் தேதி ஆலோசனை - மத்திய அரசு | முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் இணைந்துவிடுவார்கள் - தினகரன் | திருவண்ணாமலையில் 3 ஸ்கேன் மையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு | முதல்வர் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை - எச்.ராஜா |

உலக செய்திகள்

துருக்கி: நெருக்கடி நிலை மூன்று மாதங்களுக்கு நீடிப்பு + "||" + Turkish government extends state of emergency rule for another 3 months

துருக்கி: நெருக்கடி நிலை மூன்று மாதங்களுக்கு நீடிப்பு

துருக்கி: நெருக்கடி நிலை மூன்று மாதங்களுக்கு நீடிப்பு
சென்ற ஆண்டு தோல்வி அடைந்த ராணுவ கவிழ்ப்பு முயற்சிக்கு பிறகு அமலுக்கு வந்த நெருக்கடி நிலை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அங்காரா

அரசு நாடாளுமன்றத்தில் வேண்டிக்கொண்டதன்படி நான்காவது முறையாக நெருக்கடி நிலை நீடிக்கப்பட்டது. அதிபர் எர்டோகனின் கட்சிக்கு போதுமான பெரும்பான்மை பலம் உள்ளதால் கோரிக்கை நிறைவேறியது.

சென்றாண்டு தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பில் 250 பேர் வரை கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலோர் குடிமக்கள் ஆவர். நெருக்கடி நிலை அமலானது முதல் 50,000 ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தவிர 1,50,000 பேர் அரசு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். எர்டோகன் எதிரிகள் அவரது ஆட்சி எதேச்சதிகாரத்தை நோக்கி செல்வதாக கூறுகின்றனர்.

ஆனால் அரசு இந்த களையெடுப்பு பாதுகாப்பு அச்சுறுத்தலகளை சமாளிக்கத் தேவையானது என்றும் அமெரிக்காவில் தங்கியுள்ள மதகுரு குலேனின் ஆதரவாளர்களை நீக்கம் செய்யவே எடுக்கப்படுவதாக சொல்கிறது. ஆனால் குலேன் இக்குற்றச்சாட்டுக்களை ஏற்கவில்லை. துருக்கியின் துணைப்பிரதமர் கனிக்ளி குலேனின் வலைப்பின்னலை அகற்றத் தேவையான சட்ட வாய்ப்புகளை நெருக்கடிநிலை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

“அரசின் உயர்மட்டத்தில் இருந்த அனைவரும் நீக்கப்பட்டு விட்டனர். இருந்தாலும் ஒருசிலர் இன்னும் மறைந்துள்ளனர்” என்றார் கனிக்ளி. 

சென்றாண்டு இறந்து போன மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எர்டோகன் ராணுவ புரட்சியை தடுத்த மக்கள் அவர்கள் என்று கூறியதோடு ஐரோப்பிய நாடுகள் மீதான தனது கண்டனங்களையும் தெரிவித்தார். நாடாளுமன்றம் அங்கீகரித்தால் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கடும் அடக்குமுறையைக் கண்டு மேற்குலக நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில் அவற்றுடனான உறவு மோசமடைந்துள்ளது.  சென்ற வாரம் மேலும் 7,000 குடிமைப்பணியாளர்களும், கல்வியாளர்களும் அரசாணை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.