மாநில செய்திகள்

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது - மு க ஸ்டாலின் + "||" + NEET Stalin alleges treachery by the state regime

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது - மு க ஸ்டாலின்

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது - மு க ஸ்டாலின்
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு நீட் தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே அனைத்து மாநிலங்கள் மீதும் திணிப்பை செய்துள்ளது என்று கூறிய அவர் மாநில அரசு மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளது என்றும் கடுமையாக குற்றஞ்சாட்டினார்.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களையும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அரசு அனுப்பவில்லை என்று குற்றஞ்சாட்டிய ஸ்டாலின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். 

மத்திய அரசு நீட் தேர்வை திணித்து சமூக நீதியை சாகடித்துள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே கடிந்து கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

கமல் டிவீட்

நீட் தேர்வு விவகாரம் மாணவர்கள் தொடர்பானது அதற்கு உடனே பேசட்டும். மற்ற குதிரை பேர பேச்சுக்களை பின்னர் வைத்துக்கொள்ளலாம் என்று அவர் டிவீட் இட்டுள்ளார்.