மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் + "||" + Rains forecast in Tamil Nadu for next two days

தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை, 
 
தமிழ்நாடு முழுவதும் தென் மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக மாலையில் பலத்த மழை பெய்தது. இன்று காலை லேசாக மழை பெய்தது. மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மழை தூறி வருகிறது. இந்த மழையால் வெப்பம் தணிந்து இதமான குளிர் நிலவுகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தென்மேற்கு வங்கக் கடலில் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 14 செ.மீ. மழையும், திண்டிவனத்தில் 10 செ.மீ. மழையும் பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டின் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்யும். உள் மாவட்டத்திலும், டெல்டா மாவட்டத்திலும் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. 

சென்னையில் அடுத்து வரும் 2 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என அவர் கூறிஉள்ளார்.