சினிமா செய்திகள்

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார் + "||" + Film comedian Alva Vasu died of health disorder

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்.
சென்னை,

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் அல்வா வாசு. ரஜினிகாந்துடன் ‘அருணாச்சலம்’, சத்யராஜுடன் ‘அமைதிப்படை’ படங்களில் இவர் நடித்த காட்சிகள் பேசப்பட்டன. 900-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இயக்குனர் மணிவண்ணனிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.


அல்வா வாசு குடும்பத்துடன் மதுரையில் வசித்து வந்துள்ளார். அவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் உடல் நிலையை பரிசோதித்து கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அவர் தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.  எனினும், மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் அல்வா வாசு காலமானார்.  அவருக்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகளும் உள்ளனர்.