தேசிய செய்திகள்

விளம்பரத்தில் நடிக்கும் விராட் கோலி-அனுஷ்கா சர்மா? வைரலாகும் புகைப்படம் + "||" + Virat Kohli-Anushka Sharma's ad shoot pic is breaking the internet

விளம்பரத்தில் நடிக்கும் விராட் கோலி-அனுஷ்கா சர்மா? வைரலாகும் புகைப்படம்

விளம்பரத்தில் நடிக்கும் விராட் கோலி-அனுஷ்கா சர்மா? வைரலாகும் புகைப்படம்
விளம்பரத்தில் நடிப்பது போன்று விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். கலை நிகழ்ச்சிகள், விழாக்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு இருவரும் ஒன்றாக சேர்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் விளம்பர படம் ஒன்றில் சேர்ந்து நடிப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது.  அதன் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த விளம்பர படத்தில் அனுஷ்கா சர்மாவும், விராட் கோலியும் ஒருவரை ஒருவர் காதலோடு பார்த்துகொள்வது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது.  இதை இவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.  இவர்கள் எந்த விளம்பரத்தில் நடித்தார்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.

கடந்த 2013ல் ஷாம்பு விளம்பரத்தில் கோலி, அனுஷ்கா சேர்ந்தது நடித்தது குறிப்பிடத்தக்கது.