ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு கடிதம் மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் | ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஐயப்பன் மீண்டும் மார்ச் 8ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு | லோக்பால் அமைப்புக்கு தலைவரை நியமிப்பது தொடர்பாக மார்ச்.1ஆம் தேதி ஆலோசனை - மத்திய அரசு | முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் இணைந்துவிடுவார்கள் - தினகரன் | திருவண்ணாமலையில் 3 ஸ்கேன் மையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு | முதல்வர் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை - எச்.ராஜா |

தேசிய செய்திகள்

தினசரி பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையில் மாற்றம் இல்லை மத்திய பெட்ரோலியத்துறை தகவல் + "||" + Oil Minister rules out intervention on daily fuel price revision, says reform will continue

தினசரி பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையில் மாற்றம் இல்லை மத்திய பெட்ரோலியத்துறை தகவல்

தினசரி பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையில் மாற்றம் இல்லை மத்திய பெட்ரோலியத்துறை தகவல்
தினசரி பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையில் மாற்றம் இல்லை என மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், தினந்தோறும் விலையை மாற்றி அமைக்கும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 16–ந்தேதி முதல் அன்றாட அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில்  தினந்தோறும் விலையை மாற்றி அமைக்கப்பட்ட பிறகு இதுவரை  பெட்ரோலும், டீசலும் லிட்டருக்கு 7 ரூபாய் 30 காசுகள் வரை அதிகரித்து உள்ளது. எனவே இதனை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை நுகர்வோர் சார்பில் நாடு முழுவதும் எழுந்துள்ளது.

இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் செய்தியார்களிடம் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலை குறையும்போது அதன் பலன் உடனடியாக நுகர்வோரை சென்றடையும் விதமாகவும், விலை உயரும்போது அதன் தாக்கம் குறைவாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் அன்றாட விலை நிர்ணய முறையை எண்ணெய் நிறுவனங்கள் கொண்டு வந்தன.

மத்திய அரசை பொறுத்தவரை எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவே விரும்புகிறது. எனவே இதில் மத்திய அரசு எந்த விதத்திலும் தலையிடாது. இந்த சீர்திருத்தம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.