தேசிய செய்திகள்

ரோஹிங்யா விவகாரம் பிரதம அலுவலக கூட்டத்தில் உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்தது என்ன? + "||" + What Intel Experts Warned On Rohingyas In Meet At Prime Minister s Office

ரோஹிங்யா விவகாரம் பிரதம அலுவலக கூட்டத்தில் உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்தது என்ன?

ரோஹிங்யா விவகாரம் பிரதம அலுவலக கூட்டத்தில் உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்தது என்ன?
ரோஹிங்யா விவகாரத்தில் பிரதம அலுவலக கூட்டத்தில் உளவுத்துறை அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை தெரியவந்து உள்ளது.


புதுடெல்லி,

ரோஹிங்யா விவகாரத்தில் பிரதம அலுவலக கூட்டத்தில் உளவுத்துறை அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை தெரியவந்து உள்ளது.

ரோஹிங்யா அகதிகளை பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தூண்டிவிடுகிறார்கள் என இந்தியா இவ்வருட தொடக்கத்தில் மியான்மரை எச்சரித்தது.

இந்தியாவில் பல்வேறு முகாம்களில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்கள் 40 ஆயிரம் பேரை வெளியேற்ற இந்திய அரசு நடவடிக்கையை தொடங்கிய நிலையில் மியான்மரில் நிலையானது மோசமாகி உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் நகர்வு வெற்றியடையுமா என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இதற்கிடையே இந்தியாவின் நகர்வு உலக நாடுகள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் அல்-ஹூசையின், இந்தியா 40 ஆயிரம் ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்ற எடுத்துவரும் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்தியா அடிப்படை மனித இரக்கத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் எனவும் கடுமையாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, ஐ.நா. சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் இந்தியாவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு அல்லது தேசிய பாதுகாப்பு குறித்து புரிந்துக்கொள்வது கிடையாது. 

இந்தியா மிகவும் மனிதநேயம் கொண்ட நாடாகும், வழக்கமான வழிமுறையின்படி மாநில அரசுக்கள் நடவடிக்கையை தொடங்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளோம். ரோஹிங்யாக்கள் அனைவரும் இங்குதான் உள்ளார்கள் என்றார். பிரதமர் மோடி மியான்மர் சென்ற போது ரோஹிங்யா இஸ்லாமியர்கள் குறித்து பேசவில்லை எனவும் விமர்சனம் ஆகியது.

இந்நிலையில் பிரதம அலுவலகத்தில் ரோஹிங்யாக்கள் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்று உள்ளது. ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரத்தில் நிலைபாடு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் மூத்த உதவியாளர் நிர்பேந்திர மிஸ்ரா இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உளவுத்துறை உள்பட பல்வேறு முகமைகளின் அதிகாரிகள் இதில் கலந்துக் கொண்டு உள்ளனர். அவர்கள் மியான்மரில் உள்ள ரோஹிங்யா தீவிரவாத கமாண்டர்கள் மற்றும் லஷ்கர் உள்பட பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் இடையிலான தொடர்பு தொடர்பாக எழுந்து உள்ள எச்சரிக்கையில் கவனம் செலுத்தினர் என என்டிடிவி செய்தி வெளியிட்டு உள்ளது. 

கூட்டத்தில் கலந்துக் கொண்ட அதிகாரிகளால் இந்திய உளவுத்துறையின் அறிக்கையானது ஆய்வு செய்யப்பட்ட போது “ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இடையே பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கத்தின் ஊடுருவல் என்பது மிகப்பெரிய எச்சரிக்கையாக எழுந்து உள்ளது, இது இறுதியாக இந்தியாவை இலக்காக்காக்கவும் பயன்படுத்தப்படும்,” என்ற முடிவுக்கு வந்து உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.

ஆயுதம் தாங்கிய ரோஹிங்யா தீவிரவாதிகளுக்கு லஷ்கர் இ தொய்பா ஆயுதம் மற்றும் நிதிஉதவி செய்கிறது என இந்திய உளவுத்துறை நம்புகிறது. பாகிஸ்தானின் கராச்சியில் கடந்த ஜூலை 2012-ல் ரோஹிங்யா தீவிரவாத கூட்டத்தில் ஹபீஸ் சயீத் பேசிய புகைப்படங்களும் உளவுத்துறை குறிப்பில் இடம்பெற்று உள்ளது. ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி பயங்கரவாத இயக்கம் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானில் மிகப்பெரிய நெட்வோர்க்கை கொண்டு உள்ளது. பாகிஸ்தானி பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர்கள் கடந்த 2012-ல் வங்காளதேசத்தில் ரோஹிங்யா தீவிரவாதிகள் நடத்திய கூட்டத்தில் கலந்துக் கொண்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானை சேர்ந்த அல்-கொய்தா பயங்கரவாதி மவுனாலா உஸ்தாவ் வாசீர் கடந்த மாதம் தாய்லாந்து சென்று ரோஹிங்யா தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்ததாகவும் உளவுத்துறை தகவல்கள் குறிப்பிடுகிறது. கடந்த மாதம் காஷ்மீரில் புல்வாமாவில் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் 8 போலீசார் பலியாகினர். இவ்விவகாரத்தில் காஷ்மீரில் உள்ள ரோஹிங்யாக்களுக்கு பயங்கரவாத பாதைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறதா என்பது தொடர்பாகவும் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது. 

ரோஹிங்யா அகதிகளை பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தூண்டிவிடுகிறார்கள், இரு இரு நாடுகளுக்கும் மிகவும் ஆபத்தானது என இந்தியா மியான்மரை எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியது.

 பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களே மியான்மரில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறது என்பதே மியான்மர் நாட்டின் ஊடகங்களின் குற்றச்சாட்டாகவும் உள்ளது. இந்திய அரசின் எச்சரிக்கையை குறிப்பிட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது என மியான்மர் செய்தியாளர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.