ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு கடிதம் மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் | ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஐயப்பன் மீண்டும் மார்ச் 8ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு | லோக்பால் அமைப்புக்கு தலைவரை நியமிப்பது தொடர்பாக மார்ச்.1ஆம் தேதி ஆலோசனை - மத்திய அரசு | முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் இணைந்துவிடுவார்கள் - தினகரன் | திருவண்ணாமலையில் 3 ஸ்கேன் மையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு | முதல்வர் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை - எச்.ராஜா |

தேசிய செய்திகள்

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை + "||" + Gauri Lankesh murder probe Nothing revealed so far says minister

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை
பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது.

பெங்களூரு,  

பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் கடந்த 5–ந் தேதி இரவு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு சுட்டுக்கொல்லப்பட்டார். தைரியமிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதினார். அவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்கா உள்பட வெளிநாட்டு தூதரகங்களும் இந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டன. இந்த கொலையில் கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும், கொலையாளிகளை விரைந்து கைது செய்யுமாறு கோரியும் கவுரி லங்கேஷ் கொலை எதிர்ப்பு குழு சார்பில் பிரமாண்ட ஊர்வலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. 

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து சிறப்பு விசாரணை குழு(எஸ்.ஐ.டி.) விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை கொலையாளிகள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த விசாரணையில் முக்கிய தகவல் கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி, பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த விசாரணையில் இருந்து ஏதாவது துப்பு கிடைக்குமா? என்று நாங்கள் காத்து கொண்டிருக்கிறோம். நீங்கள் அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். விசாரணையில் மாநில அரசு தலையிடவில்லை. விசாரணையில் இதுவரை எந்த முக்கியமான தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்திகளே. கவுரி லங்கேஷ் கொலை குறித்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றார். 

விசாரணை அதிகாரி அனுசேத் பேசுகையில் “ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மை இல்லை. இதில் உறுதியான துப்பு எதுவும் கிடைத்தால் அதுபற்றி நாங்கள் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிப்போம்” என்றார்.