தேசிய செய்திகள்

பிரதமர் மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி:கேரள பாதிரியார் கூறியதாக சுஷ்மா சுவராஜ் தகவல் + "||" + Fr Tom spoke to me from Vatican.He profusely thanked Government of India especially the Prime Minister for efforts to rescue him EAM Swaraj

பிரதமர் மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி:கேரள பாதிரியார் கூறியதாக சுஷ்மா சுவராஜ் தகவல்

பிரதமர் மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி:கேரள பாதிரியார் கூறியதாக சுஷ்மா சுவராஜ் தகவல்
பயங்கரவாதிகளிடம் இருந்து பத்திரமாக காப்பாற்றிய இந்திய அரசுக்கு நன்றி என கேரள பாதிரியார் கூறியதாக சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் டாம் உழுன்னாலில் (56) பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவாலயங்களில் பங்கு தந்தையாக பணியாற்றியவர்.  அதனை தொடர்ந்து பாதிரியார் டாம் ஏமன் நாட்டின் ஏடன் நகரில் உள்ள அன்னை தெரசா தொண்டு இல்லத்துக்கு மாற்றப்பட்டார். 

கடந்த மார்ச் 4ம் தேதி 2016ல் ஏமன் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனை ஒன்றில் புகுந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 16 பேரை கொன்றனர். இதில் ஒரு இந்திய செவிலியர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

அந்த மருத்துவமனையிலிருந்த கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் டாம் உழுன்னலிலை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்று, பனயக் கைதியாக வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து தன்னை காப்பாற்றுமாறு பாதிரியார் வீடியோவில் பேசும் உருக்கமான காட்சிகள் ஏமன் தொலைக்காட்சிகளில் வெளியானது. 

இந்தநிலையில், இந்திய வெளியுறத்துறை, ஓமன் வெளியுறவுத் துறையின் சீரிய முயற்சிகளின் காரணமாக ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து கிறிஸ்தவ பாதிரியார் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் கூறியிருந்தார்.

மேலும்  சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

மீட்கப்பட்ட பாதிரியார் டாம் உழுநெல்லில் வாடிகனுக்கு வந்தடைந்தார். திரு. டாம் உழுநெல்லில் என்னிடம் பேசினார். பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றிய இந்திய அரசுக்கும், என்னை பாதுகாப்பாக மீட்பதற்கு முயற்சி எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும்,  எனக்காக பிரார்த்தனை செய்த இந்திய மக்களுக்கும் நன்றி. பத்திரமாக மீட்ட இந்திய வெளியுறத்துறைக்கும், ஓமன் வெளியுறவுத் துறைக்கும் நன்றி கூறியதாக அவர் கூறியுள்ளார். டாம் உழுநெல்லிலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் கூறியுள்ளார்.