ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு கடிதம் மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் | ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஐயப்பன் மீண்டும் மார்ச் 8ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு | லோக்பால் அமைப்புக்கு தலைவரை நியமிப்பது தொடர்பாக மார்ச்.1ஆம் தேதி ஆலோசனை - மத்திய அரசு | முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் இணைந்துவிடுவார்கள் - தினகரன் | திருவண்ணாமலையில் 3 ஸ்கேன் மையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு | முதல்வர் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை - எச்.ராஜா |

உலக செய்திகள்

மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 25 பேர் பலி + "||" + Fire kills at least 25 at religious school in Malaysia

மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 25 பேர் பலி

மலேசியாவில் உள்ள  பள்ளியில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 25 பேர் பலி
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 மாணவர்கள் 2 வார்டன்கள் பலியாகியுள்ளனர்.
கோலாலம்பூர்,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வந்த மத போதனை பள்ளியில்  அந்நாட்டு நேரப்படி அதிகாலை 5.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்  23 மாணவர்கள், 2 வார்டன்கள் என மொத்தம் 25 பேர் பலியாகியுள்ளனர். பள்ளியின் மூன்றாவது மாடி கட்டிடத்தில் தீ கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் காயம் அடைந்த 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து இது என்று மலேசிய தீ அணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.