தேசிய செய்திகள்

இ.பி.எஸ்.,ஓ.பி.எஸ். கூட்டிய பொதுக்குழு செல்லாது டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தில் மனு + "||" + joint general committee is not valid Dinakaran Support MPs Petition to the EC

இ.பி.எஸ்.,ஓ.பி.எஸ். கூட்டிய பொதுக்குழு செல்லாது டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தில் மனு

இ.பி.எஸ்.,ஓ.பி.எஸ். கூட்டிய  பொதுக்குழு செல்லாது டி.டி.வி தினகரன் ஆதரவு  எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தில் மனு
இ.பி.எஸ்.,ஓ.பி.எஸ். கூட்டிய பொதுக்குழு செல்லாது டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து உள்ளனர்.
புதுடெல்லி

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை இழந்துவிட்டதாகவும் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறும் எதிர்க்கட்சியான திமுக ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளது. அதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்திலும் திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் முதல் அமைச்சருக்கு அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், ஆளுநர் முடிவுக்காக காத்திருக்க போவதாக டிடிவி தினகரன் கூறியிருந்தார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி யுள்ள டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள பெண்டிங் பான் எனும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்  ஆகியோர்  பொதுக்குழுவை  கூட்டினர் பொதுக்குழுவில்  தற்காலிக பொதுச்செயலாளராக நியமிகபட்ட  சசிகலா நியமனம் ரத்து செய்யபட்டது. இ.பி.எஸ்.,ஓ.பி.எஸ். தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி டி.டி.வி தினகரன் ஆதரவு அதிமுக எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். 

புதுடெல்லியில்  இன்று தினகரன் ஆதரவு எம்பிக்கள்  விஜிலா சத்தியானந்த், செங்குட்டுவன், வசந்தி முருகேசன் உள்பட 5  பேர்  தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர். முதலமைச்சர் பழனிசாமி, பன்னீர்செல்வம் அணியின் பொதுக்குழு தீர்மானத்தை ஏற்க கூடாது என வலியுறுத்தி உள்ளனர்.