தேசிய செய்திகள்

அமர்நாத் யாத்திரை தாக்குதல்: மூளையாக செயல்பட்ட அபு இஸ்மாயிலை பாதுகாப்பு படை வேட்டையாடியது + "||" + Amarnath attack mastermind Abu Ismail could be among two terrorists killed in Kashmir Sources

அமர்நாத் யாத்திரை தாக்குதல்: மூளையாக செயல்பட்ட அபு இஸ்மாயிலை பாதுகாப்பு படை வேட்டையாடியது

அமர்நாத் யாத்திரை தாக்குதல்: மூளையாக செயல்பட்ட அபு இஸ்மாயிலை பாதுகாப்பு படை வேட்டையாடியது
அமர்நாத் யாத்திரை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி அபு இஸ்மாயிலை பாதுகாப்பு படை வேட்டையாடியது.
ஸ்ரீநகர், 

கடந்த ஜூலையில் காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பதான்கு என்ற இடத்தில் அமர்நாத் சென்று பனி லிங்கத்தை தரிசித்து விட்டு பஸ்சில் திரும்பிக்கொண்டு இருந்த பக்தர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். 19 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் காஷ்மீர் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாண்டி இந்த பயங்கர தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத தாக்குதலை நடத்தியது லஷ்கர் -இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தினர் என உளவுத்துறை விசாரணையில் தெரியவந்தது.

பாகிஸ்தானியில் இருந்துதான் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பக்தர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி இஸ்மாயில்தான் மூளையாக செயல்பட்டு உள்ளான் என ஜம்மு காஷ்மீர் போலீஸ் தெரிவித்தது. பாகிஸ்தானை சேர்ந்த இஸ்மாயில் காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனாக செயல்பட்டான். அவனுடன் மற்றொரு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி அபு துஜனாவும் உடந்தையாக செயல்பட்டான் என தெரிவிக்கப்பட்டது.
 
உள்ளூரை சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுக்க உதவி உள்ளனர் எனவும் கூறப்பட்டது. பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாடும் பணியை பாதுகாப்பு படைகள் முழு வீச்சில் தொடங்கியது. இரு மாதங்கள் கழித்து  தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி அபு இஸ்மாயிலை பாதுகாப்பு படை வேட்டையாடியது. காஷ்மீரின் நவ்காம் மாவட்டத்தில் ஸ்ரீநகர் புறநகர் பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி இஸ்மாயில் உள்பட இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி இஸ்மாயில் கொலையானது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த சிறந்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.