தேசிய செய்திகள்

ஜப்பான் உதவியுடன் தமிழகத்தில் தொழில்நகரம் அமைக்கப்படும் பிரதமர் மோடி அறிவிப்பு + "||" + Gujarat PM Narendra Modi & Japanese PM Shinzo Abe at India-Japan Business Plenary in Gandhinagar

ஜப்பான் உதவியுடன் தமிழகத்தில் தொழில்நகரம் அமைக்கப்படும் பிரதமர் மோடி அறிவிப்பு

ஜப்பான் உதவியுடன் தமிழகத்தில் தொழில்நகரம் அமைக்கப்படும் பிரதமர் மோடி அறிவிப்பு
ஜப்பான் உதவியுடன் தமிழகத்தில் தொழில்நகரம் அமைக்கப்படும் என அகமதாபாத்தில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அகமதாபாத்,

ஜப்பான் பிரதமர் ஹின்சோ அபே  2 நாள் பயணமாக நேற்று மாலை இந்தியா வந்தார். அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். இன்று காலை அகமதாபாத் மற்றும் மும்பை இடையிலானா முதல் புல்லட் ரெயில் திட்டத்தை பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அடிக்கல் நாட்டினர்.  புல்லெட் ரெயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு, இரு தலைவர்களும் விழா நிகழ்ச்சியில்  உரையாற்றினர். 

அதனைதொடர்ந்து  குஜராத் மாநிம் காந்தி நகா் பகுதியில் இந்திய – ஜப்பான் நாட்டின் உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

ஜப்பானுடனான எனது பழக்கம் பல ஆண்டுகள் பழையது.  இந்தியாவில் ஒரு குட்டி ஜப்பானை உருவாக்க வேண்டும். அந்த கனவு நிறைவேறியது. ஜப்பான் உதவியுடன் 4 இடங்களில் தொழில் நகரங்கள் அமைக்கப்படும் .  தமிழகம், குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழில் நகரங்கள் உருவாக்கப்படும்.  ஜப்பானிய மக்களையும், அந்நாட்டு நிறுவனங்களையும், இந்தியாவில் வந்து பணியாற்ற சகோதரத்துடனும், நம்பிக்கையுடனும் வரவேற்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.