தேசிய செய்திகள்

மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளிகளே பொறுப்பு, பாதுகாப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு + "||" + CBSE holds schools responsible for student safety, issues new guidelines

மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளிகளே பொறுப்பு, பாதுகாப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளிகளே பொறுப்பு, பாதுகாப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளிகளே பொறுப்பு என சிபிஎஸ்இ பாதுகாப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.


புதுடெல்லி, 

டெல்லி அருகேயுள்ள குர்கானில் ரியான் சர்வதேச பள்ளியின் கழிவறைக்குள் கடந்த 8-ம் தேதி 2-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவன் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தான். இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இதுபோன்று டெல்லியில் பள்ளி ஊழியரால் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பெங்களூருவிலும் பள்ளியில் 4 வயது சிறுமி பள்ளி ஊழியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானது தெரியவந்தது. பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான செய்திகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து சிபிஎஸ்இ பள்ளியில் பாதுகாப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. பள்ளிகளில் மாணவ - மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என சி.பி.எஸ்.இ. வாரியம் அறிவித்து உள்ளது.

சிபிஎஸ்இயின் புதிய வழிகாட்டு நெறிகளில், பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், மாணவர்களின் உளவியல் செயல்பாடு ஆய்வு, பாதுகாப்பு தணிக்கை, பாதுகாப்பு தேவைகளை கண்டறிய பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் குழுக்கள் அமைத்தல், போலீஸ் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட விதிமுறைகளை அறிவித்து உள்ளது. மாணவ-மாணவிகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதுகாப்பு உணர்வுடன் கல்வி பயில்வதற்கு ஏற்ற சூழலை பெறுவது அவர்களது அடிப்படை உரிமையாகும்.

 இந்த வசதிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டியது பள்ளி நிர்வாகங்களின் பொறுப்பு என பள்ளி நிர்வாகங்களை சி.பி.எஸ்.இ. வலியுறுத்தி உள்ளது.

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தொடர்ச்சியான பாதுகாப்பு ஆய்வு, சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், காவல்துறையின் ஆய்வு என முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சிபிஎஸ்இ தெரிவித்து உள்ளது.

பள்ளிக்கு வெளிநபர்கள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும், பள்ளிக்கு வருபவர்களை கண்காணிக்கவேண்டும் என்றும் சிபிஎஸ்இ தன்னுடைய அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளது. எந்தஒரு ஆபத்தில் இருந்தும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது பள்ளி பணியாளர்களின் பொருப்பாகும், பள்ளி ஊழியர்களுக்கு சரியான பயிற்சியை கொடுக்கவேண்டும் எனவும் பள்ளிகளை சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டு உள்ளது. பபாதுகாப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கூறிஉள்ள சிபிஎஸ்இ தவறும்பட்சத்தில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.