தேசிய செய்திகள்

யமுனையில் படகு கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு + "||" + Uttar Pradesh At least 22 dead after boat carrying 60 people capsize in river Yamuna

யமுனையில் படகு கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

யமுனையில் படகு கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு
யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பக்பட்டில் யமுனை ஆற்றில் 60 பேருடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆற்றின் நடுப்பகுதி சென்று கொண்டிருக்கும் போது திடீரென எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இது குறித்து உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் ஆற்றில் மூழ்கியவர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 

30 பேர் பயணிக்க வேண்டிய படகில் 60 பேர் பயணம் செய்ததால் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக  இறந்தவர்களின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

படகு விபத்தில் உயிரிழந்தவர்களிடன் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் இரங்கல் தெரிவித்தார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படகில் 60 பயணிகளில் பெரும்பாலும் பெண்களே இருந்ததாக கூறப்படுகிறது.