உலக செய்திகள்

பாகிஸ்தானில் பேருந்து-வேன் நேருக்கு நேர் மோதல்: 14 பேர் பலி, 30 பேர் காயம் + "||" + 14 dead, 30 injured in bus-van collision in Baluchistan

பாகிஸ்தானில் பேருந்து-வேன் நேருக்கு நேர் மோதல்: 14 பேர் பலி, 30 பேர் காயம்

பாகிஸ்தானில் பேருந்து-வேன் நேருக்கு நேர் மோதல்: 14 பேர் பலி, 30 பேர்  காயம்
பாகிஸ்தானில் பேருந்து-வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர். 30 பேர் காயம் அடைந்தனர்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்ட்டாங் பகுதியில் இன்று அதிவேகமாக வந்த ஒரு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 30 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானில் போக்குவரத்து போலீசார் அமல்படுத்தியுள்ள மோசமான பாதுகாப்பு விதிகளால் ஆண்டுக்கு 4,500 பேர் விபத்துக்களில் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.