தமிழகத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது | ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்புவாரவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது | ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல், குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்போம் - பிரதமர் மோடி | மாணவிகள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு ஜேஎன்யூ பேராசிரியர் அதுல் ஜோரி கைது |

சினிமா செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் மேக்கிங் வீடியோ: டுவிட்டரில் வெளியிட்டார் ஷங்கர் + "||" + Making video of actor Rajinikanth starrer 2.0: Shankar released on Twitter

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் மேக்கிங் வீடியோ: டுவிட்டரில் வெளியிட்டார் ஷங்கர்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் மேக்கிங் வீடியோ:  டுவிட்டரில் வெளியிட்டார் ஷங்கர்
ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குநர் ஷங்கர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
சென்னை,

ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் 2.0. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் கதாநாயகியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். இந்தி நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக வருகிறார். ஷங்கர் இயக்கி உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது.

ரூ.450 கோடி செலவில் இந்த படம் உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளன. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுது போக்கு பூங்காவில் ஒரு நகரையே அரங்கில் உருவாக்கி பெரும்பகுதி காட்சிகளை படமாக்கி உள்ளனர். பாகுபலி படத்துக்கு இணையாக கிராபிக்ஸ் பணிகள் நடந்துள்ளன.

2.0 படம் தயாரான வீடியோ காட்சிகளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இணையதளத்தில் இயக்குனர் ஷங்கர் வெளியிட்டார்.

இந்த நிலையில், 2.0 படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குநர் ஷங்கர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.