தமிழகத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது | ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்புவாரவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது | ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல், குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்போம் - பிரதமர் மோடி | மாணவிகள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு ஜேஎன்யூ பேராசிரியர் அதுல் ஜோரி கைது |

உலக செய்திகள்

ஈராக் ரெயில் நிலையத்தில் ஊடுருவ முயன்ற ஐ.எஸ். தற்கொலைப்படையினர் 3 பேர் சுட்டுக்கொலை + "||" + 3 IS suicide bomber shot dead at Iraqi railway station

ஈராக் ரெயில் நிலையத்தில் ஊடுருவ முயன்ற ஐ.எஸ். தற்கொலைப்படையினர் 3 பேர் சுட்டுக்கொலை

ஈராக் ரெயில் நிலையத்தில் ஊடுருவ முயன்ற ஐ.எஸ். தற்கொலைப்படையினர் 3 பேர் சுட்டுக்கொலை
ஈராக் நாட்டில் அன்பார் மாகாணத்தில் உள்ளது அல் பஹெய்மி ரெயில் நிலையம்.

பாக்தாத்,

ஐ.எஸ். தற்கொலைப்படையை சேர்ந்த 3 பேர் இந்த ரெயில் நிலையத்துக்குள் ஊடுருவ முயற்சித்தனர்.

இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் கண்டு கொண்டனர். உடனே அவர்களை வழிமறித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் அவர்கள் 3 பேரையும் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தால், அந்த ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தத் தகவலை ஈராக் ராணுவ அமைச்சகத்தின் போர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று தியாலா மாகாணத்தில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள், மருந்துப்பொருட்கள் போன்றவற்றை அனுப்புவதில் உறுதுணையாக இருந்து வந்த முக்கிய பிரமுகர் ஒருவர் ஈராக் படையின் வான்தாக்குதலில் சிக்கி பலியாகி விட்டார். அவர் பயணம் செய்த வாகனத்தை பவுத்ஜா–குசெய்பா கிராமங்களுக்கு இடையே குறி வைத்து நடத்தப்பட்ட குண்டுவீச்சில் அவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.