தமிழகத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது | ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்புவாரவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது | ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல், குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்போம் - பிரதமர் மோடி | மாணவிகள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு ஜேஎன்யூ பேராசிரியர் அதுல் ஜோரி கைது |

தேசிய செய்திகள்

டெல்லியில் 48-வது கவர்னர்கள் மாநாடு: மத்திய-மாநில அரசுகளுக்கு பாலமாக செயல்படுங்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் + "||" + Governors to play key role in New India dream: President Ram Nath Kovind

டெல்லியில் 48-வது கவர்னர்கள் மாநாடு: மத்திய-மாநில அரசுகளுக்கு பாலமாக செயல்படுங்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

டெல்லியில் 48-வது கவர்னர்கள் மாநாடு: மத்திய-மாநில அரசுகளுக்கு பாலமாக செயல்படுங்கள்  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
டெல்லியில் நடைபெற்ற கவர்னர்கள் மாநாட்டில் மத்திய மாநில அரசுகளுக்கு பாலமாக செயல்படுங்கள் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் 48-வது கவர்னர்கள் மாநாடு இன்றும், நாளையும் ஜனாதிபதி மாளிகையில் நடக்கிறது. இந்த மாநாட்டில் 27 மாநிலங்களில் கவர்னர்கள், 3 துணை நிலை கவர்னர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டின் முதல் அமர்வில் 2022ம் ஆண்டில் இந்தியா எட்ட வேண்டிய சாதனை இலக்குகள் குறித்து கருத்துரை இடம் பெற்றது.  

மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

கவர்னர்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படவேண்டும். மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு பேசி மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும்.

இந்தியாவின் வளர்ச்சி இளைஞர்களின் கையில்தான் உள்ளது. எனவே தேசத்தை கட்டி எழுப்பும் பணியில் இளைஞர்கள் சக்தியையும் ஈடுபடுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாநிலமும் முன்னேறினால்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்ச்சி அடையும். இதில் கவர்னர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.

இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறினார்.

இந்த விழாவில் துணை ஜனாதிபதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்,  உள்ளிட்ட மத்திய  மந்திரிகள் பலரும் கலந்துகொண்டனர்.