உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மசூதியில் தற்கொலைப்படை பயங்கரவாதி தாக்குதல், 30 பேர் உயிரிழப்பு + "||" + Afghan official Suicide bombing at Kabul mosque kills 30

ஆப்கானிஸ்தானில் மசூதியில் தற்கொலைப்படை பயங்கரவாதி தாக்குதல், 30 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் மசூதியில் தற்கொலைப்படை பயங்கரவாதி தாக்குதல், 30 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் மசூதியில் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
காபூல்,

 மேற்கு காபூலில் உள்ள மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என அந்நாட்டு உள்துறை தெரிவித்து உள்ளது. தாக்குதலில் 30 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணிகள் நடைபெறுகிறது. காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் நிலை மிகவும் மோசமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மசூதியில் தொழுகை நடைபெற்ற போது உள்ளே நடந்து வந்த பயங்கரவாதி தன்னுடைய உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து உள்ளான். இந்த தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. தலிபான் இயக்கம் நடத்தியிருக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு படைகளுக்கு எதிராக தலிபான் மற்றும் ஹக்கானி நெட்வோர்க் பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானில் நேற்று தலிபான் பயங்கரவாதிகள் ராணுவ தளம் மீது நடத்திய தாக்குதலில் 43 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.