தேசிய செய்திகள்

தீபாவளி நாளில் டூவிலரில் ஹெல்மட் அணியாமல் நகர்வலம் சென்ற ஜார்கண்ட் முதல்-மந்திரி + "||" + Jharkhand CM Raghubar Das spotted riding scooter without helmet on Diwali

தீபாவளி நாளில் டூவிலரில் ஹெல்மட் அணியாமல் நகர்வலம் சென்ற ஜார்கண்ட் முதல்-மந்திரி

தீபாவளி நாளில் டூவிலரில் ஹெல்மட் அணியாமல் நகர்வலம் சென்ற ஜார்கண்ட் முதல்-மந்திரி
தீபாவளி நாளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஹெல்மட் அணியாமல் ஜார்கண்ட்முதல்-மந்திரி நகர் வலம் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,

தலைக்கவசம் உயிர்கவசம் என டூவிலர் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஜார்காண்ட் மாநிலத்தில் தீபாவளி நாளில்  இரவு நேரத்தில் அம்மாநில முதல்-மந்திரி ரகு பார் தாஸ் போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஹெல்மட் அணியாமல் டூவிலரில் சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்தவர்களும் தலையில் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்று காணப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரி போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஹெல்மட் அணியால் டூவிலர் ஓட்டி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.