தேசிய செய்திகள்

ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் சிரியாவில் பலி கேரள போலீசார் உறுதி + "||" + Kerala Police confirm deaths of five IS-linked men in Syria

ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் சிரியாவில் பலி கேரள போலீசார் உறுதி

ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் சிரியாவில் பலி கேரள போலீசார் உறுதி
கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து சிரியாவில் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து போரிட்ட 5 வாலிபர்கள் பலியானதாக கேரள மாநிலம் கண்ணூர் போலீசார் அதிகாரபூர்வமாக உறுதி செய்து உள்ளனர்.
திருவனந்தபுரம்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சோதனையில்  ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய  5 பேரை கைது செய்தனர்.இவர்களிடம் விசாரணை நடத்தியதில்  இந்த மாவட்டத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் சிரியாவில் பலியானது உறுதியாகி உள்ளது.

இறந்தவர்கள் ஷநாத் ( வயது 25 ) சலாட்பகுதியை சேர்ந்தவர், ரிஷல்( 30 ) வலாபட்டனம், ஷமீர் (45) அவரது மகன் சல்மான்( 20) பப்பினிசேரி, ஷாஜீர் (25) எச்சூர் ஆகியோர் என அடையாளம் தெரிந்து உள்ளது. மேலும் அதே பகுதியை சேர்ந்த 15 வாலிபர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கேரள போலீசாரால் அக்டோபர் 26 ம் தேதி கைது செய்யப்பட்ட U.K. ஹம்சா இவர்களை ஐ.எஸ் நெட்வொர்க்கில் சேர அழைத்துச் சென்றார். அவர்களில் சிலர் இன்னும் சிரியாவில் இருக்கிறார்கள்.