தேசிய செய்திகள்

மும்பையில் தாவூத் இப்ராகிமின் 3 சொத்துகள் ஏலம் விடப்பட்டன + "||" + Dawood Ibrahim properties in Mumbai: In auction, government sells off 3 assets; all details here

மும்பையில் தாவூத் இப்ராகிமின் 3 சொத்துகள் ஏலம் விடப்பட்டன

மும்பையில் தாவூத் இப்ராகிமின் 3 சொத்துகள் ஏலம் விடப்பட்டன
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை, 

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் அவருக்கு சொந்தமாக ஏராளமான சொத்துகள் இருக்கின்றன. அதனை ஏலத்தில் விடுவதில் மத்திய–மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதன்படி, தெற்கு மும்பையில் உள்ள தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான ஓட்டல், விருந்தினர் இல்லம் (கெஸ்ட் ஹவுஸ்) மற்றும் தமர்வாலா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 6 அறைகள் நேற்று ஏலத்தில் விடப்பட்டன.

அதிகபட்சமாக ஓட்டல் ரூ.4 கோடியே 53 லட்சத்துக்கு ஏலம் போனது. தமர்வாலா கட்டிடத்தின் 6 அறைகள் ரூ.3 கோடியே 53 லட்சத்துக்கும், விருந்தினர் இல்லம் ரூ.3 கோடியே 52 லட்சத்துக்கும் ஏலத்தில் விடப்பட்டன. மேற்படி, 3 சொத்துகளும் ரூ.11 கோடியே 58 லட்சத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.