தேசிய செய்திகள்

திருச்சூர் பூரம் விழாவில் மக்களுக்கு உணவில் வி‌ஷம் வையுங்கள் ஐ.எஸ். பயங்கரவாதியின் மிரட்டல் ஆடியோ + "||" + Thrissur Pooram festival, put poison in the food of the people ISIS Terrorist threatening audio

திருச்சூர் பூரம் விழாவில் மக்களுக்கு உணவில் வி‌ஷம் வையுங்கள் ஐ.எஸ். பயங்கரவாதியின் மிரட்டல் ஆடியோ

திருச்சூர் பூரம் விழாவில் மக்களுக்கு உணவில் வி‌ஷம் வையுங்கள் ஐ.எஸ். பயங்கரவாதியின் மிரட்டல் ஆடியோ
திருச்சூர் பூரம், கும்பமேளா விழாக்களின்போது உணவில் வி‌ஷம் வைத்து பெரும் அளவில் மக்களை கொன்று குவியுங்கள் என்று ஐ.எஸ். பயங்கரவாதி விடுத்த ஆடியோ மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் இருந்து சிரியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இதுவரை 100–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்துள்ளதாக கேரள போலீஸ் கூறுகிறது.

இந்த நிலையில் இந்தியாவிலும் பல்வேறு வழிகளில் தாக்குதல்களை நடத்தி பெரும் எண்ணிக்கையில் மக்களை கொன்று குவிக்கும்படி ஐ.எஸ். பயங்கரவாதி மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக கேரள மாநிலம் காசர்கோடு நகரில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் இயக்கத்தில் இணைந்த ஒருவர் 10 நிமிடம் மலையாள மொழியில் பேசும் ஆடியோ உரை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நமது மக்கள் அனைவரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைய வேண்டும். அப்படி இணைய விருப்பமில்லை என்றால் பயங்கரவாத இயக்கத்தினருக்கு அதிக அளவில் நிதி உதவி அளித்திடவேண்டும்.

திருச்சூர் பூரம் விழா, கும்பமேளா போன்றவற்றில் தாக்குதல் நடத்தும்படி வேண்டுகிறோம். முதலில் இந்த விழா நடக்கும் பகுதிகளுக்கு முன்னதாகவே சென்று உணவில் வி‌ஷம் வையுங்கள். அதை அங்கே வருபவர்களுக்கு சாப்பிட கொடுங்கள். இந்த தாக்குதலில் தன்னந்தனியாக ஈடுபடுங்கள்.

இவ்வாறு அந்த உரையில் கூறப்பட்டு உள்ளது.