தமிழகத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது | ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்புவாரவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது | ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல், குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்போம் - பிரதமர் மோடி | மாணவிகள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு ஜேஎன்யூ பேராசிரியர் அதுல் ஜோரி கைது |

தேசிய செய்திகள்

காதலியை அபகரித்ததால் நடந்த கொலையை லவ் ஜிகாத் என மாற்றிய கொலையாளி + "||" + In Rajasthan love jihad burning a twist Accuseds ex-girlfriend lived with victim

காதலியை அபகரித்ததால் நடந்த கொலையை லவ் ஜிகாத் என மாற்றிய கொலையாளி

காதலியை அபகரித்ததால் நடந்த கொலையை லவ் ஜிகாத் என மாற்றிய கொலையாளி
லவ் ஜிகாத் பெயரை சொல்லி வாலிபர் கோடாரியால் கொலை செய்யப்பட்டார். காதலியை அபகரித்ததால் நடந்த கொலை என தெரிய வந்து உள்ளது.
ஜெய்ப்பூர்

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் முகமது பட்டா சேக் . இவர் ராஜஸ்தானில் தங்கி பணி புரிந்து வந்தார். ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சாமண்ட்  மாவட்டத்தில்  தேவ் ரோட்டில் உள்ள  ராஜ்நகரில்  முகமதுவை  ஷம்பூநாத் ரைகேர் என்பவர்  கோடாரியால் வெட்டி கொலை செய்து  மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து எரித்தார். பின்னர்  அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த நபர்  அதில்  லவ் ஜிகாதில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படி செய்ததாக தனது குற்றத்தை நியாயப்படுத்தி ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.  குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி ஷம்பூநாத் ரைகேர் இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் விசாரனை நடத்தியதில்  ஷம்பூநாத்தின் முன்னாள் காதலியுடன்  முகமது பட்டா பழகி வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் இந்த கொலை நடந்து உள்ளது இதனை லவ் ஜிகாதில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படி செய்ததாக கொலையாளி வீடியோவில் பதிவு செய்து இருந்தது  மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது .