தமிழகத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது | ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்புவாரவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது | ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல், குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்போம் - பிரதமர் மோடி | மாணவிகள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு ஜேஎன்யூ பேராசிரியர் அதுல் ஜோரி கைது |

மாநில செய்திகள்

நாங்கள் மிரட்டியதால் தான் வேட்புமனுவை ஏற்றதாக தேர்தல் அதிகாரி கூறுகிறார்- நடிகர் விஷால் + "||" + That's because we are intimidated The election official says that the nomination is appropriate - Actor Vishal

நாங்கள் மிரட்டியதால் தான் வேட்புமனுவை ஏற்றதாக தேர்தல் அதிகாரி கூறுகிறார்- நடிகர் விஷால்

நாங்கள் மிரட்டியதால் தான் வேட்புமனுவை ஏற்றதாக தேர்தல் அதிகாரி கூறுகிறார்- நடிகர் விஷால்
நாங்கள் மிரட்டியதால் தான் வேட்புமனுவை ஏற்றதாக தேர்தல் அதிகாரி கூறுகிறார் என நடிகர் விஷால் கூறினார்
சென்னை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் களமிறங்கி வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். 

தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பேட்டியளித்து வருகிறார். இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியையும் சந்தித்து முறையிட்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையம், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரையும் முறையிடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் விஷால் மனுவை முன்மொழிந்த தீபன், சுமதி நேரில் வந்து கையெழுத்து தங்களது தான் என கூறினால்  மனு ஏற்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. மனு ஏற்கப்பட்டால் மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும், இன்று மாலை 3 மணி வரை விஷால் மனு ஏற்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

நடிகர்  ஆர்.கே நகர்  தண்டையார் பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி வேலுசாமியை சந்தித்தார். தனது வேட்பு மனுவை மறு பரீசிலனை செய்யுமாறு கோரிக்கை வைத்து உள்ளார். தன்னை முன் மொழிந்த தீபன் சுமதி காணாமல் போனது குறித்தும் புகார் கூறினார். 

பின்னர் நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் மிரட்டியதால் தான் வேட்புமனுவை ஏற்றதாக தேர்தல் அதிகாரி கூறுகிறார்.  முன்மொழிந்த இருவரையும் நான் அழைத்துவரும்படி கூறவில்லை என தேர்தல் அதிகாரி கூறுகிறார்.  இந்திய தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்து புகார் அளிக்க உள்ளேன்.

இடைத்தேர்தலில் போட்டியிட முடியவில்லை என்றாலும் வெளியில் இருந்து ஆர்.கே. நகர் மக்களுக்கு நல்லது செய்வேன்.நான் தேர்தலில் போட்டியிடுவதைவிட என்னை முன் மொழிந்தவர்களின் பாதுகாப்பே முக்கியம். என கூறினார்.