தேசிய செய்திகள்

இஸ்லாமிய தலைவரை முதல்-மந்திரியாக்க காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என பேனர்கள், பா.ஜனதா மீது குற்றச்சாட்டு + "||" + Congress vs BJP On Ahmed Patel Mystery Posters With A Communal Twist

இஸ்லாமிய தலைவரை முதல்-மந்திரியாக்க காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என பேனர்கள், பா.ஜனதா மீது குற்றச்சாட்டு

இஸ்லாமிய தலைவரை முதல்-மந்திரியாக்க காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என பேனர்கள், பா.ஜனதா மீது குற்றச்சாட்டு
இஸ்லாமிய தலைவரை முதல்-மந்திரியாக்க காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்ற வாசகம் தாங்கிய பேனர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் முதலாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடியும் கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் பேனர்கள் காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. அகமது படேல் மாநில முதல்-மந்திரியாக காங்கிரசுக்கு இஸ்லாமியர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ராகுல் காந்தி மற்றும் அகமது படேல் புகைப்படம் தாங்கிய பேனர்கள் காணப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுடன் பகிரப்பட்டு வருகிறது. பேனர் விவகாரத்தால் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையே கடும் விமர்சனங்களுடன் சமூக வலைதளங்களில் மோதல் நேரிட்டு உள்ளது.

இந்நிலையில் பேனர்கள் விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சியை காங்கிரஸ் குற்றம் சாட்டிஉள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் அகமது படேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், “போலியான போஸ்டர்களை கொண்டு வதந்தியை பரப்பும் பிரசாரம் மேற்கொள்வது பாரதீய ஜனதாவின் விரக்தியை காட்டுகிறது. தோல்வி பயத்தில் அவர்கள் இதுபோன்ற மோசமான தந்திரத்தில் நம்பிக்கை வைக்கவேண்டும்? நான் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் கிடையாது,” என கூறிஉள்ளார். ராகுல் காந்தி குஜராத்தில் கோவிலுக்கு சென்ற போது வருகைப் பதிவேட்டில் அவர் இந்து இல்லை என கையெழுத்திட்டதாக வெளியாகிய தகவலை காங்கிரஸ் நிராகரித்தது. 

அயோத்தி விவகாரம் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே கடும் வாக்குவாதம் நேரிட்டு உள்ள நிலையில் போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.