மாநில செய்திகள்

தமிழகத்தில் போலி வாக்காளர்கள் களையப்பட வேண்டும் சரத்குமார் வலியுறுத்தல் + "||" + Sarath Kumar urged the fake voters to be bleached

தமிழகத்தில் போலி வாக்காளர்கள் களையப்பட வேண்டும் சரத்குமார் வலியுறுத்தல்

தமிழகத்தில் போலி வாக்காளர்கள் களையப்பட வேண்டும் சரத்குமார் வலியுறுத்தல்
உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகத்தில் போலி வாக்காளர்கள் களையப்பட வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக வெளியிடப்பட்டிருக்கும் இறுதி வாக்காளர் பட்டியலில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,28,234 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது 2016–ம் ஆண்டு மே மாத எண்ணிக்கையான 2,54,497 வாக்காளர்களில் இருந்து 26,263 குறைவாகவும், 2017–ம் ஆண்டு ஏப்ரல் மாத எண்ணிக்கையான 2,62,721 வாக்காளர்களில் இருந்து 34,487 குறைவாகவும் இருக்கிறது. 8 மாத இடைவெளியில் சுமார் 13 சதவீத வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது வியப்பாக உள்ளது.

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் இதுபோன்ற போலி வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும். முறைகேடாக வாக்காளர்களை சேர்க்கும் அதிகாரிகளுக்கும், சேர நினைக்கும் வாக்காளர்களுக்கும் கடுமையான தண்டனை கிடைக்கச் செய்யவேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன். பல்வேறு தேர்தல் முறைகேடுகளோடு சேர்த்து, போலி வாக்காளர்கள் என்பதும் களையப்பட்டு, ஜனநாயகம் களங்கப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்றும் ச.ம.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.