தேசிய செய்திகள்

கேரளாவில் புயல் பாதித்த பகுதிகளில் ராகுல்காந்தி 14–ந்தேதி ஆய்வு + "||" + Rahul Gandhi to vist cyclone hit areas on Dec 14: Cong leader

கேரளாவில் புயல் பாதித்த பகுதிகளில் ராகுல்காந்தி 14–ந்தேதி ஆய்வு

கேரளாவில் புயல் பாதித்த பகுதிகளில் ராகுல்காந்தி 14–ந்தேதி ஆய்வு
கேரளாவில் ஓகி புயல் பாதித்த பகுதிகளில் ராகுல்காந்தி 14–ந்தேதி ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம், 

கேரள மாநிலத்தில் ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி வருகிற 14–ந்தேதி பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ‘வருகிற 14–ந் தேதி கேரளா வரும் ராகுல்காந்தி முதலில் புயலால் பாதிக்கப்பட்ட பூந்துரா மற்றும் விழிஞ்சம் கடலோர பகுதிகளை பார்வையிடுகிறார். அதன்பிறகு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவனந்தபுரம் மாவட்டம் சங்குமுகம் கடற்கரை பகுதியில் நடக்கும் பிரமாண்ட பேரணியில் அவர் கலந்து கொள்கிறார் ’ என்றார்.