தேசிய செய்திகள்

சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது டெல்லி ஐகோர்ட்டு கருத்து + "||" + Playing rummy for small stakes is not illegal, rules Delhi High Court

சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது டெல்லி ஐகோர்ட்டு கருத்து

சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது டெல்லி ஐகோர்ட்டு கருத்து
சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது என டெல்லி ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

டெல்லியில் இயங்கி வரும் கிளப் ஒன்றில் வேலைபார்த்த சுரேஷ் குமார் என்பவரை, கிளப் நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீக்கியது. இதைத்தொடர்ந்து அவர் அந்த கிளப்பை மாபியா கும்பல் ஒன்று இயக்குவதாகவும், அங்கு சூதாட்டம் நடப்பதாகவும் உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த கோர்ட்டு, கிளப்பில் சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது குற்றமல்ல என்று கூறியதுடன், பொய் வழக்கு தொடர்ந்ததற்காக சுரேஷ் குமாருக்கு ரூ.3 லட்சம் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சுரேஷ் குமார் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வால்மீகி ஜே.மேத்தா, கீழ் கோர்ட்டின் கணிப்பை உறுதி செய்தார்.

அவர் தனது உத்தரவில் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு சரியான கருத்தையே கொண்டுள்ளது என்பதே எனது கருத்தாகும். ஏனெனில் சுப்ரீம் கோர்ட்டின் கூற்றுப்படி, ஒரு கிளப் வளாகத்தில் வெறும் ஒரு சில அணாக்கள் முதல் சிறிய தொகை வரையிலான ரூபாய் வரை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது’ என்று தெரிவித்தார்.